ஹோம் /தஞ்சாவூர் /

புது ரோடு போட்டாச்சு.. ஆனா தெரு விளக்கு இல்லை... தஞ்சாவூர் மூலிகை பண்ணைப் பகுதியில் இருளில் தவிக்கும் மக்கள்

புது ரோடு போட்டாச்சு.. ஆனா தெரு விளக்கு இல்லை... தஞ்சாவூர் மூலிகை பண்ணைப் பகுதியில் இருளில் தவிக்கும் மக்கள்

இருள்

இருள் சூழ்ந்த சாலை

தஞ்சாவூர் மூலிகை பண்ணையிலிருந்து - பிள்ளையார் பட்டி சாலையில் எந்த ஒரு மின் விளக்கும் அமைக்கப்படாததால் சுமார் 3 கி.மீ தூரம் இருளில் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல வேலைகள் நடந்து வருகிறது. இதில் முக்கியமாக தஞ்சை நகரம் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையார் பட்டியிலிருந்து - மூலிகைப் பண்ணை வரையிலும் சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.

சாலைகள் நன்றாக போடப்பட்டாலும் மின் விளக்கு அமைக்கப்படாமலேயே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட அனைவரும் சுமார் 3 கி.மீ தூரம் டார்ச் லைட், மொபைல் லைட் பயண்படுத்தி செல்கின்றனர். இந்த 3 கி.மீ இடையில் பல தெருக்கள் அமைந்துள்ளது.

தெரு விளக்கின்றி இருளில் தவிக்கும் சாலை

இந்த தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் கடைகளுக்கோ பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கோ - செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் விடுதியும் இடைப்பட்ட தொலைவில் தான் அமைந்துள்ளது.

தெரு விளக்கின்றி இருளில் தவிக்கும் சாலை

இந்த மாணவர்கள் அத்யாவசிய தேவைகளை வாங்குவதற்கு கடைகளுக்கு இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. அணைத்து மக்களும் பூச்சி, பாம்புகளுக்கும், பயந்து பயந்து அச்சத்துடனே தினமும் செல்கின்றனர்.

தெரு விளக்கின்றி இருளில் தவிக்கும் சாலை

இதுகுறித்து பேசிய வேலைக்கு சென்று இருளில் நடந்து வரும் அப்பகுதி பெண்கள், ‘நான் இந்த பகுதியில் 22 வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த 22 வருடங்களாகவும் இதே நிலைமைதான் உள்ளது. சாலைகள் நன்றாக போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமலே இருக்கிறது.

இந்த 22 ஆண்டுகளாக இருளில் நடந்து செல்பவர்களுக்கு விடியல் எப்போது வரும் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து மின் விளக்கு ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur