தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் டிராபிக் பார்க் அருகே மருத்துவக் கல்லூரி செல்லும் மேம்பாலம் உள்ளது. தஞ்சையில் அதிகப்படியான வாகனங்கள் செல்லும் பாலங்களின் வரிசையில் இந்த பாலம் முதலிடம் என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு அதிக அளவிலான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இவ்வழியே மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் செல்ல முடியும்.இந்தப் பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை.
அதற்கு மாறாக வரும் அனைத்து வாகனங்களும் அதி வேகமாகவே சென்று வருகின்றது. காரணம் இந்த பாலத்தின் வடிவமைப்பே உடனே ஏறி உடனே இறங்கும் வகையில் தான் இந்த பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
சற்று குறுகிய பலமாகவும் இருக்கிறது. தஞ்சையில் அதிகம் விபத்து நடக்கும் ஒரு முக்கிய பாலம் என்றால் அது இதுதான். எத்தனையோ உயிர்கள் இதில் சிக்கிக் கொண்டு மேலே சென்று விட்டது.வாகன ஓட்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கு என்னதான் செய்வது என அப்பகுதி மக்களிடமே கேட்டு அறிந்தோம் அவர்கள் கூறுகையில், ‘கேமரா வைத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை வண்டி எண்களை குறித்து உடனடியாக அபராதம் விதிப்பதன் மூலம் மட்டும்இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
பணம் இருக்கிறவன் காசை கட்டிட்டு போயிடுவான். மறுபடியும் அதே தப்பு மீண்டும் பண்ணுவான். ஒருமுறை நடந்தாலும் அது பேரிழப்பு தானே. பாலத்திற்கு முன்பே உள்ள சாலையை அகலப் படுத்த வேண்டும். பாலத்திற்கு முன்பே டிராபிக் பார்க் அருகில் வேகத்தடை வைக்க வேண்டும்.
சாலையை ஒட்டி உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றி சற்று பின்புறம் வைக்க வேண்டும்.பாலத்தை சற்று விரிவுபடுத்த வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இருந்தாலும் அது முடிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க | தஞ்சை ப்ரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாஸ் காட்டிய பள்ளி மாணவர்கள்
எனவே தடுப்பதற்கு இந்த வழியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் எனவும், ஒரு சிலர் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்து பைக்கை கைப்பற்ற வேண்டு.ம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவர்களை சிறையில் தள்ள வேண்டும்என்றும் கூறினர்.
ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்துக்களை மட்டுமே தெரிவிக்க முடியும்.இதற்கு மேல் மாநகராட்சி வேறு எந்த சிந்தனையில் உள்ளது என்பது தெரியவில்லை. முடிந்த அளவில் நல்ல முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Local News, Longest Bridge, Thanjavur