ஹோம் /தஞ்சாவூர் /

பறையாட்டம், குதிரையாட்டத்துடன் பொன்னியின் செல்வன் முதல் காட்சியை கொண்டாடிய தஞ்சை மேயர்

பறையாட்டம், குதிரையாட்டத்துடன் பொன்னியின் செல்வன் முதல் காட்சியை கொண்டாடிய தஞ்சை மேயர்

பொன்னியின்

பொன்னியின் செல்வன் கொண்டாட்டம்

Thanjavur ponniyin selvan fdfs | பொன்னியின் செல்வன் படத்தின் முதல்காட்சிக்கு பறையாட்டம், குதிரை ஆட்டத்துடன் தஞ்சை மேயர் வருகை தந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை பல ஜாம்பவான்களும் திரைப்படமாக்க முயற்சி செய்து முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதை சாதித்துக் காட்டி உள்ளார்.

தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கே முக்கிய காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே பொன்னியின் செல்வன் கதை உருவானது.

திரையரங்கில் குதிரையாட்டம்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதையை படமாக்க எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், யாராலும் எடுக்கப்பட முடியாமல் இருந்தது. தற்போது, மணி ரத்னம் அதைச் சாதித்துள்ளார்.

திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்

மணி ரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியனது. தமிழகத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட நிலையம் தஞ்சையிலும் வெகு விமரிசையாக பறையாட்டம், மயிலாட்டம், குதிரை ஆட்டத்தோடு கொண்டாடப்பட்து.

இதில் தஞ்சை மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் தஞ்சை இளைஞர்கள் கலந்து கொண்டனர். பொன்னியில் செல்வனை மற்றும் சுமார் 1 கி.மீ தூரம் பறையாட்டத்துடன் திரையரங்கம் வரை நடந்து வந்து கோலாகலமாக சிறப்பித்தனர்‌. இதில் குதிரை ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur