முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு.. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்..

தஞ்சாவூர் மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு.. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்..

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு

Thanjavur News | லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்துகொண்டன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்ததை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3வது ஜல்லிக்கட்டு போட்டியாக தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூர் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்துகொண்டன. இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக கோட்டாட்சியர் ரஞ்சித் ஜல்லிக்கட்டுக்கான விதிமுறைகளை உறுதிமொழியாக வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து போட்டி தொடங்கியது. 12 சுற்றுக்களாக போட்டி நடத்தப்படுகிறது. முதலில் கோவில் காலை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வந்தன. அதனை தயாராக இருந்த வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு திமிலை பிடித்து கொண்டு அடக்கினர்.

இதையும் படிங்க : தஞ்சையில் முருகனுக்கு ஆறுபடை வீடு இருக்கு தெரியுமா?

இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. இந்த நார்களில் காளைகளும், வீரர்களும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் முட்டியதில் வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் போலீசார் செய்திருந்தனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Thanjavur