ஹோம் /Thanjavur /

Thanjavur | ஒரத்தநாடு- மருங்குளம்-வல்லம் அருகே நெடுச்சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

Thanjavur | ஒரத்தநாடு- மருங்குளம்-வல்லம் அருகே நெடுச்சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர் சாலை

தஞ்சாவூர் சாலை

Thanjavur | தஞ்சாவூரின் முக்கிய நெடுஞ்சாலையில் வேகத்தடை, டிவைடர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சையின் முக்கிய பகுதியான ஒரத்தநாடு- மருங்குளம்-வல்லம் செல்வதற்கு நெடுஞ்சாலையானது அமைந்துள்ளது. இவ்வூர்களுக்கு  செல்லும் வழியில்  உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் நெடுஞ்சாலையின் கிராம பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த இணைப்பு சாலையானது‌ வடக்கூர் மற்றும் அப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்களுக்கு செல்லும் சாலையாகும். இந்த ஈச்சங்கோட்டை பகுதிக்கு உள்ளிருக்கும் அனைத்து கிராமங்களும் இந்த இணைப்பு சாலையை பயன்படுத்தியே தஞ்சைக்கு செல்கிறார்கள்.

வேகத்தடை இல்லாத சாலை

மேலும் அந்த நெடுஞ்சாலையானது ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சி செல்வதற்கான முக்கியமான சாலையாக இருக்கின்றது.

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் எந்த நேரமும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சாலையாகும்.

வேகத்தடை இல்லாத சாலை

இந்தச் சாலையின் ஒரு பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த கிராமப் பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையிலும் அதிக அளவில் வாகனங்கள் வரும்நிலையில் எதிரெதிர் வாகனங்கள் சந்தித்து அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வேகத்தடை இல்லாத சாலை

பொதுவாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்லும். இந்த இணைப்புச் சாலைகளில் வரும் வாகனங்களும் நெடுஞ்சாலையை கடக்கும் போது மெதுவாக வராமல் அவர்களும் மின்னல் வேகத்தில் திரும்புகிறார்கள்.

இதனால் அதிக அளவில் இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த விபத்துக்களை தடுப்பதற்கு மறுங்குளம் பகுதியில் இருந்து ஈச்சங்கோட்டை பகுதி வரைக்கும் பிரிப்பான் (Divider) மற்றும் இணைப்பு சாலையில் வேகத்தடையும் வைத்தால் இந்த விபத்துக்களை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் அதிகளவிலான பள்ளி வாகனங்களும் பள்ளி மாணவர்களும் செல்லும் நிலையில் இதுபோன்ற தடுப்புகள் அமைக்கப்படாததால், மாணவர்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது.

எனவே இந்த முக்கியமான பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடப்பதால் மேலும் பேரிழப்புகள் ஏற்படுவதற்கு முன், இந்த சாலையில் பிரிப்பான் மற்றும் இணைப்புச் சாலையில் வேகத்தடையும் அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.

மேலும் இந்த நெடுஞ்சாலையானது தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur