முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும்- கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும்- கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

மது குடித்து உயிரிழந்தவர்கள்

மது குடித்து உயிரிழந்தவர்கள்

தஞ்சாவூரில் கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் 20 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மீன் சந்தைக்கு ஏராளமானோர் வருவதால், டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பாரில் காலை 6 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு, காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.

அதே இடத்தில் கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும், மது குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது கள்ளச் சந்தையில் மது வாங்கிக் கொடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய உறவினர்கள், ‘ஞாயிற்றுக்கிழமை உடற்கூராய்வு செய்யமாட்டார்கள். ஆனால் இன்று ஏன் அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்து உடலை ஒப்படைக்க காவல்துறையின அவசரம் காட்டுகிறார்கள். இரண்டு பேரின் மரணத்திற்கு உரிய காரணம் தெரியாமல் உடலை வாங்க மாட்டோம்’ என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ‘கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய்  நிவாரணம் வழங்கிய அரசு,  தமிழக அரசின் மதுபான கடையில் மது வாங்கி குடித்து உயரிழந்த குடும்பத்தினருக்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் மரணத்திற்கு உரிய காரணம் தெரிய வேண்டும். இல்லை என்றால் உடலை வாங்க மாட்டோம்’ என்று தெரிவித்தனர்.

டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கிக் குடித்த இருவர் பலி- தாசில்தாரை கடையில் பூட்டிவைத்த மக்கள்- தஞ்சையில் பரபரப்பு

top videos

    உயிரிழந்த குப்புசாமி மீன் வியாபாரி ஆவார். திருமணமாகி இரண்டு மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இதேபோல் மீன் வியாபாரி விவேக்கும் திருமணமானவர். அவருக்கு திருமணம் ஆகி தற்போது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Thanjavur