ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் நடைபெற்ற இறுதிகட்ட கரும்பு அறுவடை- கரும்புகள் மீதமிருப்பதால் விவசாயிகள் வேதனை

தஞ்சையில் நடைபெற்ற இறுதிகட்ட கரும்பு அறுவடை- கரும்புகள் மீதமிருப்பதால் விவசாயிகள் வேதனை

X
தஞ்சை

தஞ்சை கரும்பு அறுவடை

Thanjavur | தஞ்சாவூரில் இறுதி கட்ட கரும்புகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழர்களின் முக்கிய பண்டிகையாகவும் விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் ஒரு பண்டிகையாகவும் இருக்கும் பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு அறுவடை பணிகள் நேற்று இறுதிநாளாக விவசாயிகள் கரும்பு அறுவடைப் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பே விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்து வந்தனர். இந்தநிலையில் அரசு நேரடியாக கொள்முதல் செய்த கரும்புகள் போக மீதமுள்ள கரும்புகளை விவசாயிகள் நேற்று அறுவடை செய்து முடித்தனர்.

கரும்பு அறுவடை

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 20 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு பயிரிட்ட நிலையில் அரசு கொள்முதல் செய்த கரும்புகள் போக மீதமுள்ள கரும்புகளை இன்று அறுவடை செய்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் விற்றனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி பேசிய விவசாயிகள், ‘அரசு ஆறடி நீளம் உள்ள கரும்புகளை மட்டும் ஏற்றுக் கொண்டதால் 5 அடி நான்கடி கரும்புகளை விற்க முடியாமல் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

இதனாலேயே கரும்புகளை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு ஒரு கரும்பின் விலை 20 ரூபாய்க்கு எடுத்துக் கொண்ட நிலையில் இந்த நான்கடி, 5 அடி கரும்புகளை 15 இல் இருந்து 16 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரும்புகளை அறுவடை செய்து வருகிறோம். இருந்தும் விற்க முடியாத கரும்புகளை என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அடுத்த முறை அரசு கரும்புகளை நேரடி கொள்முதல் செய்யும் போது 5 அடி கரும்புகளையும் ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் விவசாயிகள் கூறினர்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Thanjavur