முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / பித்தளை அண்டாவிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்... தஞ்சாவூரில் பயங்கரம்!

பித்தளை அண்டாவிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்... தஞ்சாவூரில் பயங்கரம்!

பலியான பெண்

பலியான பெண்

Thanjavur | பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அருகே பூட்டிய வீட்டில் இருந்த பித்தளை அண்டாவில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள பண்டாரவாடை கரைமேட்டு தெருவை  சேர்ந்தவர் செல்வமணி (55). இவரது கணவர்  சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு செல்வமணி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்வமணியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனிடையே பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர்கள் உடனடியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது செல்வமணி அண்டாவிற்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து அண்டாவிற்குள் வைத்து சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

First published:

Tags: Crime News, Murder, Thanjavur