Home /thanjavur /

தஞ்சையில் வெள்ள பாதிப்புகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தஞ்சையில் வெள்ள பாதிப்புகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளுக்கு பாதிக்கப்படுவோர்களுக்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக இதில் கட்டுப்பாட்டு சேவை மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்படுவோர்களுக்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் மழை பெய்து வருதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

    இதனால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிட கரை ஓரங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இலவச அழைப்பு எண்ணான 1077, தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி