Home /thanjavur /

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: தஞ்சையில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: தஞ்சையில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் கொள்ளிடம் ஏற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மின் மோட்டர்களை இயக்க முடியாமல், மாவட்டத்திற்குள் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கூட்டு குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டது.

    இதனால் நேற்று முதல் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. எனவே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூர், ஆடுதுறை, சோழபுரம், திருபுவனம் மற்றும் வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, அப்பகுதி பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி