ஹோம் /தஞ்சாவூர் /

துர்நாற்றத்தில் தவிக்கிறோம்.. எங்கள் உயிர் முக்கியம் சார்... தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் வேதனை

துர்நாற்றத்தில் தவிக்கிறோம்.. எங்கள் உயிர் முக்கியம் சார்... தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் வேதனை

தஞ்சை

தஞ்சை காய்கறி மார்க்கெட்

Thanjavur kamararajar vegetables market | தஞ்சாவூர் காமாராஜர் காய்கறி மார்கெட்டை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் உள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் மழை நீருடன் காய்கறியின் கழிவுகளும் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு வியாபாரிகளுக்கு நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளது.

தஞ்சையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் முக்கிய காய்கறி மார்க்கெட் ஆகும். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்த இந்த காய்கறி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெறுவதால் புதுக்கோட்டை சாலையில் தற்காலிகமாக மாற்றப்பட்டு காமராஜர் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது.

தஞ்சை தற்காலிக மார்க்கெட்

அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ஒருநாள் மழைக்கு, ஏன் ஒரு மணி நேர மழைக்கு கூட மழை நீரில் நாசம் ஆகிறது.

தற்போது இந்த மார்க்கெட்டில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி காய்கறியின் கழிவுகளும் மழை நீருடன் கலந்துள்ளதால் மார்க்கெட் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

கழிவு நீர் தேங்கி மார்க்கெட்

குப்பைகளை அகற்றுவதற்கு தாமதப்படுத்துவதால் பல நாட்களாக மார்க்கெட்டில் காய்கறியின் கழிவுகள் தேங்கியுள்ளது. அதனால் துர்நாற்றம் வீசுவதோடு வியாபாரிகளுக்கு நோய் தொற்றும் பரவுகிறது. கால் வைக்கும் இடம் எல்லாம் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அடுக்கிவைக்கப்பட்டுள்ள வெங்காயம்

இதுகுறித்து இந்த மார்க்கெட்டில் தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கூறுகையில், ‘கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அச்சப்படுகின்றனர். ஒரு மணி நேரம் மழை வந்தால் கூட இந்த இடத்தில் வியாபாரம் செய்ய முடியாது. மழைக் காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் குப்பைகளை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. எங்களின் பரிதாப நிலையை பார்த்து வரும் வாடிக்கையாளர்கள் எப்படி இந்த இடத்தில் வியாபாரம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

மார்க்கெட் கடைகள்

சிலர் வந்து இங்கிருக்கும் அவல நிலையை பார்த்து காய்கறிகளை வாங்காமல் திரும்ப செல்கின்றனர். இதனால். காய்கறிகள் விற்கப்படாமல் நஷ்டம் அடைகிறது. ஐந்து நிமிடம் கூட இங்கு நின்று காய்கறிகளை வாங்க முடியாது. ஆனால் இந்த இடத்தில் தான் நாங்கள் உணவு உண்கிறோம். சிலருக்கு சொந்த வீடு கூட இல்லை.

கழிவுநீர் தேங்கி மார்க்கெட்

இந்த மார்க்கெட்டை நம்பி தான் பலர் இங்கு தங்குகின்றனர். இதில் முக்கியமாக இரவு நேரங்களில் பாம்புகளின் தொல்லை அதிகளவில் உள்ளது. காய்கறி மூட்டையை திறந்து பார்த்தால் காய்கறி இருக்கிறதோ இல்லையோ பாம்பு உள்ளே இருக்கிறது. தினமும் இந்த துர்நாற்றத்தோடும் கழிவு நீரோடும் பாம்புகளுக்கு பயந்து ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறோம். இது தற்காலிக மார்க்கெட்டாக இருந்தாலும் உயிர் ரொம்ப முக்கியம் சார்.

தயவுசெய்து இந்த இடத்தை சுத்தம் செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur