முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை: அரசு, தனியார் ஐடிஐகளில் சேர 25-ம் தேதி கடைசி தேதி-விண்ணப்பிப்பது எப்படி?

தஞ்சை: அரசு, தனியார் ஐடிஐகளில் சேர 25-ம் தேதி கடைசி தேதி-விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சையிலுள்ள ஐ.டி.ஐகளில் சேருவதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களில் சேர மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் பல்வவேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. ஏராளமான நலத்திட்டங்களையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடிஐ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 8ம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும், அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஆகவே, மாணவர்கள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

முதல் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்களும், தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் அல்லது கடன் அட்டை வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

top videos

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Thanjavur