நர்சரி என்றாலே நமக்கு தெரியாத நிறைய மரக்கன்றுகளும் இயற்கை செடிகளும் அதிகளவில் இருக்கும். அதிலும் ஈஷா நர்சரி என்பது தமிழகம் முழுவதும் பல இடங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சத்குரு வால் உருவாக்கப்பட்ட இந்த நர்சரி யானது தமிழகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டுவருகிறது.
தஞ்சையில் இருக்கும் இந்த நர்சரியானது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஈஷா நர்சரி:
தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே இந்தச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் செடிகள் மற்ற மாவட்டங்களில் இருக்கும் ஈஷா நர்சரிக்கு அனுப்பப்படுகிறது.
இதில் வருடத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈஷா நர்சரி
மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மரக் கன்றுகள் மற்றும் செடிகளும் ஹைபிரிட் விதை கொண்டு உற்பத்தி செய்யாமல் நாட்டு விதைகளைப் பயன்படுத்தியே அனைத்து மரம், செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விவசாயிகளுக்கு மட்டும் மானியத்துடன் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்
தஞ்சை மற்றும் சில மாவட்டங்களில் மட்டுமே விவசாயம் வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சாகுபடி செய்யப்படுகிறது.

ஈஷா நர்சரி
மற்ற மாவட்டங்களில் நில வசதி இருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அதனால் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு மட்டும் மரக்கன்றுகள் மானியத்துடன் மொத்தமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகள், மரக்கன்றுகள் மற்றும் பல வகையான செடிகளை வளர்த்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தியும் மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வருவாய் ஈட்டி தரக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
மேலும் இந்த நர்சரியின் நோக்கம் குறித்து இங்கு வேலை பார்க்கும் இளைஞர் கூறியதாவது, ‘இந்தக் காவிரியை மீட்டெடுக்கும் திட்டமானது சத்குருவால் 2019 அன்று தொடங்கப்பட்டது. இதில் காவிரி ஆற்றை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அதாவது டெல்டா மாவட்டம் முழுவதும் 242 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவேற உள்ளது. இதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றது.

ஈஷா நர்சரியில் பெண்கள்
இந்ததிட்டத்தை விரைவில் முடிப்பதற்காக டெல்டா மாவட்ட பகுதியில் உள்ள 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து அந்த விவசாயிகளு தலா 2 லட்சம் மரக்கன்றுகள் வீதம் 20 லட்சம் மரக்கன்றுகளை கொடுத்து உற்பத்தி செய்வதற்கான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளோம் என கூறினார்.
இதன் மூலம் மரக்கன்று நடும் பணிகளும் நடைபெறுவதாகவும். மேலும் இந்த காவேரியை மீட்கும் திட்டத்தை இவர்கள் மிகவும் ஒரு லட்சியமாக கருதி அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் கூறினார்.
இந்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம்
விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார்.
40க்கும் மேற்பட்ட கன்று வகைகள்:
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் இந்த ஈஷா நர்சரியானது 40க்கும் மேற்பட்ட அதாவது டிம்பர் மரம், பூ மரம், பழ மரம் மற்றும் நிழல் மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் இந்த ஐந்து வகைகளில் 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் செடி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும் இந்த நர்சரியில் கிட்டத்தட்ட இருபத்தி எட்டு பேர் வேலை செய்வதாகவும் அதில் 25 பேர் (பெண்கள்) உட்பட 3 ஆண் நிர்வாகிகள் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்க கூடிய மரக்கன்றுகள்:
பொதுவாக விவசாயிகளை பொருத்தவரை செம்மரம், தேக்கு, வேங்கை, சந்தனம் இது போன்ற விலை உயர்ந்த மரங்களை பிற்காலத்தில் அதிக அளவில் பயன்படுவதால், இந்த வகையான மரங்களை அதிக அளவில் வாங்குவார்கள்.
மேலும் பூ மரங்கள், பழ மரங்கள், நிழல் மரங்கள் இது போன்ற வகையான மரங்களை, பொது நிகழ்ச்சிகளில் மக்களுக்கு கொடுப்பதற்கும் அதிகளவில் வாங்குவார்கள் எனவும் கூறினார்.
மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் சொந்த நிலத்தில் வைப்பதற்காக மட்டுமே டிம்பர் மரங்கள் எனப்படும் தேக்கு, சந்தனம் இது போன்ற மரங்களை கொடுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இந்த வகையான மரக்கன்றுகளை கொடுப்பது இல்லை எனவும் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.