ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்; புகார் செய்தல், பாதுகாப்பாக இருத்தல்- விவரிக்கும் காவல் ஆய்வாளர்

Thanjavur | அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்; புகார் செய்தல், பாதுகாப்பாக இருத்தல்- விவரிக்கும் காவல் ஆய்வாளர்

சைபர்

சைபர் க்ரைம்

தற்போதைய தொழில்நுட்பக் காலத்தில் சைபர் குற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. அதுகுறித்த போதிய புரிதல் பொதுமக்களிடம் இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தற்போது இருக்கும் நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. இது நமக்கு பல வழிகளில் நன்மைகளை தருகிறது. அதே நேரத்தில் சிலர் அறியாமையில் செய்யும் தவறினால் பல சிக்கலான சூழலில் மாட்டுவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையே இழந்து தவிக்கின்றனர்.

குறிப்பாக சைபர் குற்றங்களை சொல்லலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க எவ்விதமான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இச்சிறப்பு தொகுப்பில் விரிவாக காணலாம்:

சைபர் குற்றம்:

இணையத்தை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து வகையான குற்றங்களும் சைபர் குற்றம் ஆகும். இந்த குற்றங்களை யார் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் நாம் மொபைல் மற்றும் கணினியை பயன்படுத்தும் போது தேவையற்ற லிங் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

பணத் தேவைக்காக எளிய முறைகளில் பணம் கிடைக்கிறது என்று அரசால் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்து தன்னை பற்றிய முழு தகவல்களையும் கடன் தருபவனுக்கு தந்து விடுகிறார்கள். அவர்கள் நிபந்தனை விடுக்கும் குறுகிய காலத்தில் பணத்தை செலுத்தாததால் உங்கள் தனிப்பட்ட தரவுகளை எடுத்து மிரட்டல் விடுக்கிறனர்.

இதனால் பல குடும்பங்கள் வேதனையடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி யாரென்றே தெரியாத ஒருவரின் பொய்யான தகவல்களை நம்பி மெசேஜில் வரும் லிங்கை தொடருகிறார்கள். 1,000 ரூபாய் முதல் லட்சம் வரை பரிசு வரும் என்ற தகவலை நம்பி தன்னுடைய தனிப்பட்ட தரவுகளை இழக்கின்றனர்‌.

கண்டவர்களிடம் OTP பகிருவது, அரசால் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்வது, இவை அனைத்தும் பண மோசடி கும்பல் செய்யும் செயலாகும். இவை அனைத்திலும் நம்மை பாதுகாக்க இது போன்று அறியாமல் செய்யும் செயலை தவிர்த்தால் நம்மையும் நம் குடும்பத்தை பாதுக்காக்க முடியும்.

இது குறித்து பேசிய தஞ்சை மாவட்ட சைபர் காவல் ஆய்வாளர், ‘

நம் தனிப்பட்ட தரவுகளை இழக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதே இதற்கு முக்கிய வழியாகும். பெண்கள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுகிறார்கள். தற்போது இருக்கும் புதிய தலைமுறையினனரும் எளிதில் பதிவிடுகிறார்கள். இதன் மூலம்‌ யாரோ ஒருவன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அருவருக்கத்தக்க வகையில் செய்கிறான். இது போன்ற குற்றங்களை அதிக அளவில் சந்திக்கிறோம்‌.

பண மோசடி குற்றங்களில் உடனடியாக மீண்டு வர பணத்தை இழந்து விட்டோம் என‌ தெரிந்த உடனே 1930 என்ற சைபர் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சைபர் குற்றங்கள் அனைத்துக்கும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இணைய வழியில் www.cybercrime.gov.in குற்றங்களை இந்த இணைய வழியில் தெரிவிக்கலாம்.

மேலும் பண மோசடியில் சிக்கியவர்களுக்கு 100% பணத்தை மீட்டு கொடுத்து வருகிறோம். மேலும் இந்த வருடத்தில் வரும் அனைத்து மோசடி குற்றங்களில் இருந்தும் பொதுமக்களை மீட்டு எதிரியை அடையாளம் கண்டு சிறையில் அடைப்போம் என்று கர்வத்துடன் கூறினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur