Home /thanjavur /

Thanjavur | செம்மறி ஆடு வளர்ப்பில் லாபம் பார்ப்பது எப்படி? 

Thanjavur | செம்மறி ஆடு வளர்ப்பில் லாபம் பார்ப்பது எப்படி? 

செம்மறி

செம்மறி ஆடுகள்

Thanjavur | தஞ்சாவூர் ஓரத்தநாட்டைச் சேர்ந்த முதியவர் செம்மறி ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் பார்த்துவருகிறார்.

கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் ஈடுபடும் தொழிலாக செம்மறி ஆடு வளர்ப்பு உள்ளது. இந்த செம்மறி ஆடு வளர்ப்பை சரியான முறையில் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்பது எதார்த்தமான உண்மையாகும்.

இந்த செம்மறி ஆடு வளர்ப்பு முறையும் மற்றும் செம்மறியாடு வளர்ப்பவர்கள் தினம் தினம் சந்திக்கக்கூடிய இன்னல்களை பற்றி தஞ்சையை சேர்ந்த செம்மறி ஆடு வளர்ப்பில் பல வருடங்களாக ஈடுபடும் தொழிலாளி எம்பெருமாள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில் தலைமுறை தலை‌ முறையாக செம்மறி ஆடு வளர்த்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி எம்பெருமாள். இவர் 13 வயதிலிருந்து செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலை பொறுத்தவரையில் நிறைய சிரமங்கள் இருந்தாலும் சரியான முறையில் வளர்த்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

செம்மறி ஆடு வளர்ப்பு:

செம்மறி ஆடுகளை Shed போட்டு வளர்க்க கூடாது. பட்டி முறையில் திறந்த வெளியில் ஆடுகளை புற்கள் இருக்கும் பகுதிகளில் மேய்க்க‌‌ வேண்டும். ஆடுகள் மற்ற வயலுக்கு செல்லாமல் இருக்க தரிசு வயலினை சுற்றியும் வலை போட்டு தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி ஆடுகளை கவனித்து கொள்ள வேண்டும். நோய் ஏதும் ஏற்படுகிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். பட்டி போட்டு ஆடுகளை வளர்த்தாலே சிறந்த லாபம் கிடைக்கும்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளுக்கு அதிகப்படியான நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மருந்தகங்களில் கிடைக்கும் மருந்தும் சரியாக குணமாகாததால் ஆடுகள் இறக்க நேர்கிறது என்று வருத்தமுடன் கூறினார்.

இஸ்லாமிய பண்டிகை காலங்களில்‌ அதிக அளவில் விற்பனையாகிறது என்றும் கூறினார்.

ஆரம்பத்திலேயே இந்த தொழிலில் நல்ல லாபம் பெற்று விட முடியாது. இதில் ஏராளமான சிரமங்கள் இருக்கும். அனைத்தையும் கடந்து நிதானமாக இருந்தால் மட்டுமே லாபம் பெற முடியும். உதாரணத்திற்கு பல ஊர்களில் சென்று அங்கேயே தங்கி ஆடுகளை வளர்பதால் ஆடு திருடும் நபர்களிடமிருந்து இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முடிந்த அளவு கிடா ஆடுகளை வாங்கி வளர்ப்பது சரியானதாகும். ஏனென்றால் பண்டிகை காலங்களில் கிடா ஆடுகளை தான் கடவுளுக்கு படைப்பார்கள் என்றும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி