முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் இன்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் குஷி...

தஞ்சையில் இன்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் குஷி...

X
தஞ்சை

தஞ்சை மழை

Thanjavur | தஞ்சாவூரில் பல பகுதிகளில் இன்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பெய்த திடீர் மழையால் சூடாக இருந்த தஞ்சையை மழை சற்று கூல் படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அனல் பறந்தது. தற்போது தஞ்சையை சுற்றியுள்ள பல பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் மற்றும் நெல் கொள்முதலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து தஞ்சை மற்றும் ஒரத்தநாடு அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டது.. ஒரு சில பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. இன்று மதியம் மருங்குளம், ஈச்சங்கோட்டை, வடக்கூர், காராமணி தோப்பு, சாமிப்பட்டி மற்றும் ஒரத்தநாட்டை சுற்றியுள்ள சில பகுதிகளில் சற்று அதிகமாக மழை பெய்தது.

"தமிழ்நாட்டை விட்டா எங்களுக்கு வேற கதியில்லை"புலம்பும் வட மாநில தொழிலாளர்கள்!

தஞ்சையை பொருத்த வரையில் காலையில் சிறிது நேரம் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் நெல் அறுவடை பணிகளில் பெரிதளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.

First published:

Tags: Local News, Thanjavur