Home /thanjavur /

4 நாட்கள்; 20 பேர்- தஞ்சை கைத்தறி பட்டுகள் உருவாகும் விதம் தெரியுமா?

4 நாட்கள்; 20 பேர்- தஞ்சை கைத்தறி பட்டுகள் உருவாகும் விதம் தெரியுமா?

தஞ்சை

தஞ்சை பட்டு நெய்தல்

தஞ்சை நகரத்திலும் காலம் காலமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக பட்டு நெசவு தொழில் செய்து வருகின்றனர். கைத்தறியினால் செய்யப்படும் புடவைகள் இங்கு பிரபலமாக உள்ளன.

    தஞ்சாவூர் மானம்புச்சாவடி பட்டு நூல் கார தெருவில் பல ஆண்டு காலங்களாக நெசவாளர்கள் பட்டுப்புடவைகள் நெய்து வருகின்றனர்.

    தஞ்சையில் கச்சா மற்றும் முருக்கு பட்டு வகைகளே அதிக அளவில் நெய்யப்படுகிறது. இந்த பட்டுகள்‌அனைத்தும் பெங்களூர் மற்றும் மைசூரில் இருந்து வாங்கி புடவை நெய்கிறார்கள்.

    மேலும். ஒரு புடவை நெய்வதற்கு 4 நாட்கள் மற்றும் ஒரு‌ புடவை நெய்ய குறைந்த பட்சமாக 20 பேர் தேவைப்படுகிறார்கள்.
    தஞ்சை பகுதிகளை பொருத்தவரையில் பட்டு புடவைகள் கைத்தறியால் மட்டுமே நெய்யப்படுகிறது.

    GST யால் தொழிலை விடும் நெசவாளர்கள்:

    இந்த நெசவு தொழில் குறித்து பேசிய நெசவாளர்கள், ‘கடந்த 2015 ஆண்டுக்கு பிறகு ஜி.எஸ்.டி வரியால் பட்டு நூல் விலை அதிகரித்துள்ளது. இதனால் போதிய அளவில் பட்டுகள் வாங்க முடியாததால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு நெசவாளர் சங்கத்தினர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

    கைத்தறியில் பட்டு நெய்தல்


    இந்த பட்டு புடவைகள் பற்றி பேசிய தஞ்சையில் இருக்கும் பட்டு புடவை கடை உரிமையாளர் அமுதா, ‘தஞ்சையை பொருத்த வரையில் பட்டு புடவைகளில் கச்சா முருக்கு ரக பட்டுகளே அதிக அளவில் நெய்வார்கள்.

    அழகிய பட்டுப் புடவை


    மக்கள் பல‌ இடங்களில் பட்டு புடவை என கலப்பட புடவையை வாங்கி ஏமாறுகிறார்கள்.‌ பெரும்பாலும் இணையத்தில் சிலர் பட்டு புடவை என கலப்பட பட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்கிறார்கள்.என்று கூறினார்.

    கைத்தறியில் பட்டு நெய்தல்


    பட்டு புடவைகளின் ஆரம்ப விலையாக 4,000 ரூபாயிலிருந்து வெள்ளி ஜரிகையில் நெய்யும் புடவைகள் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக‌ இருப்பதாகவும் கூறினார். மேலும் மக்கள் எங்கு புடவை வாங்கினாலும்‌ இது பட்டுதானா என பார்த்து வாங்க வேண்டும் என்று கூறினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி