தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (22-ம் தேதி - சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜோதிலிங்கம் தோன்றிய திட்டை பிரளய காலத்தில் உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டபோது இறைவன் ஜோதிலிங்கமாக ஒரு மேட்டுப்பகுதியில் அருள்பாலித்தார். அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கம், மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி, அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும், அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.
இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இங்கு குருபவகான் சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனிச்சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
இதையும் படிங்க : குருப்பெயர்ச்சி 2023 : சுசீந்திரம் கோவிலில் 23ம் தேதி சிறப்பு வழிபாடு!
இந்த விழா வருடாவருடம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் நாளை (22-ம் தேதி - சனிக்கிழமை) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இதை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. லட்சார்ச்சனை குருப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக அடுத்தமாதம் மே 1-ம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் ரூ.300 ஆகும்.
மேலும் அடுத்தமாதம் 2-ந் தேதி மற்றும் (செவ்வாய்க்கிழமை), 3-ந் தேதிகளில் (புதன்கிழமை) பரிகார ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ.500 ஆகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இந்த குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குருப்பெயர்ச்சியையொட்டி சுபமுகூர்த்த கால் நடும் விழா நடந்தது. என கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Local News, Thanjavur