தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி சார்பில் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
வேளாண் கல்லூரி:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2014 இல் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் வேளாண் அறிவியலில் இளங்கலைக் கல்வியை வழங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்போது, கல்லூரியில் நிர்வாகத் தொகுதி, ஆய்வகங்கள், நூலகம், ஆடிட்டோரியம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் ஐந்து துறைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் ஆண்டுதோறும் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு சென்று விவசாயம், விவசாயம் சம்பந்தப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கிராமங்களுக்கு பல நற்பணிகளையும் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகின்றது.
அதன்படி இந்த ஆண்டு ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 9 தேதி வரை நடைபெற இருக்கிறது.
நலப்பணித் திட்டம்:
இதில் வடக்கூர் கிராமத்தில் உள்ள உள்ள விவசாயிகளுக்கு நவீன முறையில் விவசாயம் செய்வது போன்ற செயல் விளக்கங்களும் இயற்கை வேளாண் விவசாயம் செய்வது குறித்தும் பேரணியாக சென்று கிராமத்ததினருக்கு எடுத்துரைத்தனர். மேலும் விபத்துக்களை தடுப்பதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமையும் கிராம மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
புதிதாய் திறக்கப்பட்ட தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் - மன வருத்தத்தில் வியாபாரிகள்.. காரணம் என்ன?
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur