ஹோம் /தஞ்சாவூர் /

விளையாட்டில் கலக்கும் அரசு பள்ளி மாணவர்கள்.. தஞ்சையில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..

விளையாட்டில் கலக்கும் அரசு பள்ளி மாணவர்கள்.. தஞ்சையில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Tanjore District News : தஞ்சாவூரிலுள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைத்து வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நீலகிரி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.

தஞ்சாவூர் நீலகிரியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளி, மாணவர்களுக்கு படிப்பையும் தாண்டி அவர்களது திறமையை வெளிக்கொணரும் வகையில்‌ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அதிக ஒத்துழைப்பை தந்து வருகிறது.

இதனால் இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த 239 மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்று விளையாட்டுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தருவதால் மாணவர்களின் எண்ணிக்கை 239-லிருந்து 560 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் : லோன்ஆப்பில் கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 15 மாணவர்கள் என இப்பள்ளியில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் கூட பங்கேற்று பரிசுகளை குவித்து‌ வருகின்றனர்.

தலைமையாசிரியர் மட்டுமின்றி மற்ற பாட ஆசிரியர்களும் இப்பள்ளி மாணவர்களுக்கு படிப்பை தாண்டி விளையாட்டுத்துறை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து

முழு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாங்க படிப்புல மட்டும் இல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் தான் என ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள் உறுதிப்படுத்தி வராங்க. அரசு பள்ளியில இத்தனை மாணவர்களுக்கு விளையாட்டுல ஆர்வம். இத்தனை பரிசுகளை மாணவர்கள் வெற்றி பெற்றதைப் பார்க்கும்போதுபலரும் மகிழ்ச்சியாக உணர்கின்றனர்.

First published:

Tags: Local News, Tanjore