ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | என்னா வாய்ஸ் பா!.. இனிமையான குரலில் பாடங்களைப் பாடி அசத்தும் அரசு பள்ளி மாணவி

Thanjavur | என்னா வாய்ஸ் பா!.. இனிமையான குரலில் பாடங்களைப் பாடி அசத்தும் அரசு பள்ளி மாணவி

X
மாணவி

மாணவி பிரியதர்ஷினி

Thanjavur | தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவி மிகச் சிறப்பாக பாடல்களைப் பாடி அசத்திவருகிறார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

அரசு பள்ளி மாணவி பிரியதர்ஷினி நாட்டுப்புற மற்றும் சினிமா பாடல்களை அசல் மாறாமல் இனிமையான குரலில் தத்ரூபமாக பாடி அசத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டியை சேர்ந்தவர் மாணவி பிரியதர்ஷினி. இவர் மனோஜ் பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தூய்மை பணியாளராக இவரது தந்தை வேலை பார்த்து வருகிறார். மாணவிக்கு சிறுவயதிலிருந்தே இசையின் மேல் உள்ள அதீத காதலால், இனிமையான குரல் வளம் கொண்ட இவர் சினிமா மற்றும் நாட்டுப்புற பாடல்களை குடும்பத்தினரிடம் பாடி வந்துள்ளார்.

மனோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த இவர் பள்ளியில் வாரம் இரண்டு முறை இசை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கற்று அவ்வப்போது பாடி வந்துள்ளார். தற்போது 10 வகுப்பு பயின்று வரும் இந்த மாணவி தினசரி பாடல் வகுப்புக்கு செல்லாமலே மிக அருமையாக பாடி வருகிறார். அரசு பள்ளிகளில் நடந்த கலைத் திருவிழா நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெற்று பல பாடல்களை பாடி பரிசுகளை பெற்றுள்ளார்.

இது மட்டுமின்றி பல மாவட்டங்களில் பள்ளி மூலம் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி அவ்வப்போது பல பரிசுகளையும் பெற்று வரும் நிலையில், தற்போது முறையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இருந்தும் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு பயிற்சிகளை எடுக்க முடியாமல் உள்ளார். எப்படியாவது முறையான பயிற்சி எடுத்து நன்கு பாடி விட மாட்டோமா என்ற இசை ஏக்கத்தில் இருந்து வருகிறார்.

First published:

Tags: Local News, Thanjavur