முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் | முறையான சாலை வசதி இல்லாமல் தடுமாறும் கோபால் நகர் கிராம மக்கள்

தஞ்சாவூர் | முறையான சாலை வசதி இல்லாமல் தடுமாறும் கோபால் நகர் கிராம மக்கள்

X
தஞ்சை

தஞ்சை சேதமடைந்த நிலையில் சாலை

Thanjavur | தஞ்சாவூர் மாவட்டம் கோபால் கிராம மக்கள் நீண்ட காலமாக சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மருங்குளத்தை அடுத்து கோபால் நகர் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-ம் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் தலையாயபிரச்சனையாக இருப்பது சாலை பிரச்னைதான். இந்த கிராமத்தில் 3 தெரு சாலைகள் உள்ளன.

அதில் 2 சாலைகள் கிட்டதட்ட சேதமடைந்த நிலையில் மீதமுள்ள ஒரு தெருவில் உள்ள சாலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலைகளில்தற்போது கப்பி கற்கள் சிதறி போய், ஜல்லிகள் மேல வந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதானால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த சாலை

இதுகுறித்து பேசிய கிராம மக்கள், ‘எத்தனையோ முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை அப்போதே ஓரிரு ஆண்டுகளில் கற்கள் சிதறி போய் விட்டது.

ஓட்டு கேட்க வரும்போது சாலை சீரமைத்து தருகிறோம் என்று சொன்னார்கள்.

ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் யாரும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். இனியாவது அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இப்பகுயை கண்காணித்து சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur