கிறிஸ்துமஸ் வர போகுது அப்படியே புது ஆண்டும் பிறக்க போகுது. பண்டிகை கொண்டாடுவதற்கு ஸ்டார், கேக், கிறிஸ்துமஸ் ட்ரீ, எக்கச்சக்கமான கிப்ட்ஸ் எல்லாம் பலருக்கும் மைன்ட்ல லிஸ்டில் இருக்கும். இதுல முக்கியமா கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவதற்கு தஞ்சையில் உள்ள பல கடைகளில் விற்பனை தொடங்கியுள்ள நிலையில ஆர்வமா வந்து வாங்க தொடங்கியிருக்காங்க நம்ம தஞ்சை மக்கள்.
ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஏசுவின் பிறப்பை முன்பே அறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிடுவது வழக்கம். அதே போல ஏசு மாட்டு தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் வீடுகள், தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்படும்.
அதில் ஏசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, தேவதூதர்கள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்களும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட சிறிய உருவங்களும் இடம் பெற்றிருக்கும். இதனால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக தேவையான பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் குவித்துவிடுவர்.
அவற்றை கிறிஸ்தவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி சென்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார், அலங்கார பொருட்களின் விற்பனை தஞ்சை பகுதிகளில் களை கட்ட தொடங்கியது.
இதுகுறித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் கார்ட் ஷாப் கடை வைத்திருக்கும் வியாபாரி ஆயிஷா கூறுகையில், ‘வழக்கத்தைவிட இந்த ஆண்டு பல வகையான ஸ்டார்கள் விற்பனக்கு வந்துள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக் ஸ்டார், எல்.இ.டி. ஸ்டார், பேப்பர் ஸ்டார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.
இவற்றின் ஆரம்ப விலை ரூ.20-ல் இருந்து ரூ.1,200 வரை உள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மரங்கள் 1 அடி முதல் 8 அடி வரை உள்ளன. உயரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை ரூ.60 முதல் ரூ.1,500 வரை இருக்கிறது. ’கிறிஸ்துமஸ் தாத்தா ஆடை ரூ.250 முதல் ரூ.600 வரை இருக்கிறது. அதே போல பேப்பர், அட்டை, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள குடில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
குடில்களில் வைப்பதற்கான சிறயவகை மண் பொம்மைகள், குழந்தை ஏசு சொரூ பங்கள், பலூன்கள், தோரணங்கள், அலங்கார மணி, டூம் லைட், எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விற்பனையும் கடந்த சில தினங்களாக சூடுபிடித்துள்ளதாக கூறினார்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Local News, Thanjavur