Home /thanjavur /

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 1-ம் தேதி முதல் துவக்கம்-விண்ணப்பிப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 1-ம் தேதி முதல் துவக்கம்-விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  வரும் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டுள்ளது.

    இதற்கான கல்வித்குதி டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வு நவம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வரும் 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    மேலும் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பானது அனுபவிமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பாடக்குறிப்புகளும் வழங்கப்படுகிறது. மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

    டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதியினை 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி