Home /thanjavur /

தஞ்சாவூரில் பாரம்பரிய நெல் விதைகளுக்கு 50% மானியம் அறிவிப்பு

தஞ்சாவூரில் பாரம்பரிய நெல் விதைகளுக்கு 50% மானியம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சை சேதுபாவாசத்திரத்தில் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    பாரம்பரிய நெல் விதைகளுக்கு 50% மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதன் முறையாக பாரம்பரிய நெல் விதைகளுக்கு சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று வேளாண்உதவி இயக்குநா் ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்திலுள்ள குருவிக்கரம்பை, பெருமகளூா் வேளாண் விரிவாக்க
    மையங்களில், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைத் திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவிகிதம் மானிய விலையில் கிலோ ரூ.12.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மாப்பிள்ளை சம்பா நீண்ட கால சம்பா பருவ ரகம், 155 முதல் 160 நாள் வயதுடையது. இரும்புச் சத்து, நாா்சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயளிகள், வாய் அல்சா் நோயளிகளுக்குப்
    பரிந்துரைக்கப்படுகிறது.

    கருப்பு கவுனி ரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது. 155 நாள் வயதுடையது. கருடன் சம்பா ரகம் பச்சை சையம் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    ரத்தசோகை உள்ளவா்கள், நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கு உணவாக சாப்பிட ஏற்றது. வைட்டட் மின், தாதுக்கள் நிறைந்த அரிசி வகையாகும். மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா , கருப்பு கவுனி உள்ளிட்டட் ரகங்கள் இருப்பில் உள்ளது.

    தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகலுடன் வேளாண் உதவி அலுவலா் பரிந்துரையின் பேரில், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி