Home /thanjavur /

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை- காலங்கள் கடந்தும் சிறப்புடன் திகழ்வது எப்படி?

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை- காலங்கள் கடந்தும் சிறப்புடன் திகழ்வது எப்படி?

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூரில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தலையாட்டி பொம்மையும் அந்த ஊரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதற்கு பல சிறப்புகள் உள்ளன.

கி.பி 16-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் ஆளப்பட்டது. அவர்கள் எலிசபெத் மகாராணியின் சமகாலத்தவர். ஆனால் நாயக்கர்கள் வருவதற்கு முன்பே தஞ்சையில் தஞ்சாவூர் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

தலையாட்டி பொம்மை என்பது ராஜா, ராணியை குறிக்கும். இந்த பொம்மைகள் அடிபகுதியில் எடை மிகுந்ததாகவும் மேல் பகுதி எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுவதால், இந்த பொம்மைகளை சாய்து தள்ளினாலும் கீழே விழாமல் புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும்.

இது சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தை விட முன்னதாகவே இந்த பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெறும் கூழ் மற்றும் களிமண்ணின் கலவை அல்ல. இது பண்டைய அறிவியலாகும்.

மேலும் பல ஆண்டுகளாக தலையாட்டி பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தஞ்சையை சேர்ந்த மாயாண்டியிடம்
விசாரித்தபோது, அவர் தலையாட்டி பொம்மை தயாரிப்பு குறித்து விரிவாகத் தெரிவித்தார்.

தயாரிக்கும் முறை

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் பேப்பர்(மரம்) கூழ், நாம் சாப்பிடும் மரவள்ளி கிழங்கு மாவுடன் 1:3 என்ற விகிதத்தில் மூழ்கடித்து, அவை பூரி மாவு போல் மாவாகக் கட்டுப்படுத்திய பின்பு அந்த மாவானது கைகளில் ஓட்டாத நிலை வந்த பிறகு, அதனை பூரி மாவு போல் தேய்த்து அச்சுகளில் வைத்து உருவாக்குவதாகவும், ஆனால் அந்த காலகட்டத்தில் அச்சுகள் பயண்படுத்தாமல் கைகளிலேயே அச்சு வேலைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாகும் கூறினார்.

தலையாட்டி பொம்மைகள்


 

பிறகு சிலைகள் சாயம் பூசப்பட்டு, அரை மணி நேரம் நிழலில் உலர வைக்கப்பட்டு பின்னர், சாய வார்ப்பு காகிதங்களுடன் சிலை ஒட்டப்பட்டு ஒன்றரை மணிநேரம் சென்ற பிறகு, பொம்மைகளின் இரண்டு பகுதிகள் சரி செய்யப்பட்டும் அதன் பிறகு பொம்மைக்கு ஒரு கோட் மாவு பூசப்பட்டு அதன் பிறகே பொம்மையின் இடைவெளி மூடப்படும்.

தலையாட்டி பொம்மை


பின்னர், கீழே களிமண் சேர்க்கப்பட்டும் அது உலர்ந்த பின்பு, பொம்மை வர்ணம் பூசப்பட்ட பிறகு பொம்மை தட்டில் இறுதித் தொடுதல் கொடுக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன.

தலையாட்டி பொம்மை


அதன்பின் உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண் கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன என கூறினார்.

தயாரிக்க ஆகும் காலம் மற்றும் விற்கும் முறை:

தஞ்சாவூர் பொம்மை தயாரிக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆவதாகவும் வியாபாரிகள் வந்து எங்களிடம் மொத்தமாக வாங்குவதாகவும், அதனை தஞ்சை பெரிய கோவில் வாசல் மற்றும் உள்ளே இருக்கும் கலை பொருள் கூடத்திலும் தஞ்சையில் பல்வேறு இடங்களிலும் விற்க்கபடுவதாகவும் மாயாண்டி கூறினார்.

தஞ்சை பொம்மையை வாங்காமல் பெரிய கோவிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறாது என ஐதீகம் உள்ளது எனவும் கூறினார்.

எந்தெந்த பயன்பாட்டுக்கு அதிக அளவில் வாங்குகிறார்கள் ?

இந்த பொம்மைகள் வீட்டை அலங்கரிக்கவும் மற்றும் பரிசுகளாக கொடுப்பதற்கும் பெரும்பாலும் குழந்தைகள் அதிக அளவில் வாங்குவதாகவும் கூறினார். மேலும் பொம்மையின் விலை பொம்மையின் அளவைப் பொறுத்து மாறுபடும்.

இந்த பொம்மையின் தனித்துவம் ?

தலையாட்டி பொம்மையின் ஈர்ப்பு மையம் மற்றும் மொத்த எடை அதன் அடிமட்டத்தில் குவிந்துள்ளது. இதனால் மெதுவாக நாம் தொட்டாலே அதிக அளவில் அசைவு ஏற்பட்டு நடனம் ஆடுவது போல் தோற்றமளிக்கும். மேலும் தஞ்சை பொம்மைகள் ராஜா - ராணி ஜோடியில் மட்டுமே செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி நாம் பொம்மைகளை தரையில் படுக்க வற்புறுத்தும்போதும் ​​அவை எதிர்த்து நிமிர்ந்து நிற்கும். இது ஒரு கலை அம்சமாகும், இது ஆச்சரியத்திற்குரியது.

தஞ்சை பொம்மைகள் உலகளவில் குழந்தைகளின் கவனத்தை ஈர்கும். ஏனெனில் அது நிலையானதாக இருக்கும். ஒரு குறும்புக்கார குழந்தை அதை பயன்படுத்த மிகவும் விளையாட்டாக இருக்கும் எனவும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி