ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரியில் 2023ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை..!

தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரியில் 2023ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை..!

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur Eichangottai Government College of Agriculture | தஞ்சை அடுத்த ஈச்சங்கோட்டை தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று 2022-2023-இளநிலை வேளாண்மை பட்ட படிப்பிற்கான கான மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2014ல் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் (TNAU) வேளாண் அறிவியலில் இளங்கலை கல்வியை வழங்கும் 14 உறுப்பு கல்லூரிகளில் ஒன்றாகும். இது தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்போது, ​​கல்லூரி முழு அளவிலான நிர்வாக தொகுதி, ஆய்வகங்கள், நூலகம், ஆடிட்டோரியம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் 5 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

கல்லூரியில் 279 மாணவர்கள் இளங்கலை படிப்பை படித்து வருகின்றனர். வளர்ந்து வரும் இக்கல்லூரியில் 20223க்கான இளங்கலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து 175 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

சேர்ந்த முதல் நாளிலேயே வெளி மாவட்ட மாணவர்கள் பலர் விடுதியில் தங்க தொடங்கியுள்ளனர். மாணவர்களுக்கு முதல் நாள் வரவேற்புரை நிகழ்ச்சியாக கருத்தரங்கத்தில் ஒவ்வொரு மாணவரையும் மேடையில் அழைத்து கல்லூரி நிர்வாகம் வரவேற்றது.

இதில் கல்லூரியின் மூத்த மாணவர்கள், புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 350 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரி டீன் வேலாயுதம் கல்லூரி பற்றியும், மாணவர்களைப் பற்றியும், கல்லூரியில் இருக்கும் வசதிகளை பற்றியும் எடுத்துரைத்தார். பின்பு பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

First published:

Tags: Local News, Tanjore