முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் குழாய் பொருத்திய மண் பானை விற்பனை குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை..!

தஞ்சையில் குழாய் பொருத்திய மண் பானை விற்பனை குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை..!

X
மண்பானை

மண்பானை விற்பனை

Thanjavur District News | தஞ்சையில் வெயில் காலம் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில், குழாய் பொருத்திய மண்பானைகள் தஞ்சாவூர் சரபோஜி மார்கெட் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருளைத் தேடி ஓடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க முன்பெல்லாம் மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் கிடைக்கும் அதிக குளிர்ச்சியான நீரால் மண்பானையின் மோகம் பெரும்பாலானோரிடம் குறைந்துள்ளது.

இருந்தும் பெரும்பாலும் கிராம பகுதிகளில் நம் பாரம்பரிய மண்பானையில் வெயில் காலங்களில் மண்பானைகளை வாங்கி தண்ணீர் குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தஞ்சையில் வெயில் காலம் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில், குழாய் பொருத்திய மண்பானைகள் தஞ்சாவூர் சரபோஜி மார்கெட் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் பானையை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் பானைகள் விற்பனையாகுமா? என எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது ரூ.250-650 வரை விற்பனை செய்யப்படும் இந்த குழாய்கள் பொருத்தப்பட்ட மண்பானைகள் சென்றாண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே தஞ்சையில் அதிக அளவில் விற்பனை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு இதுவரையில் மண் பானை குறைந்த அளவு கூட விற்பனையாகவில்லை.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

அடுத்த 2 மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருக்கும் நிலையில், அப்போதாவது விற்பனையாகுமா என எதிர்பார்த்துள்ளனர் வியாபாரிகள்.

First published:

Tags: Local News, Thanjavur