முகப்பு /தஞ்சாவூர் /

சோழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய்.. தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சியில் வியந்து பார்த்த பொதுமக்கள்! 

சோழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய்.. தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சியில் வியந்து பார்த்த பொதுமக்கள்! 

X
சோழர்கள்

சோழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய்

Thanjavur Dog Show | தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த நாய்கள் கண்காட்சியில் சோழர் காலத்தில் போருக்கு பயன்படுத்திய அலங்கு வகை நாய்களை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அருகே உள்ள மாதாகோட்டை பகுதியில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கத்தில் கால்நடை பாரம்பரிய துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நாய்கள் கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200 நாய்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதனைத்தொடர்ந்து கண்காட்சியில் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்பு, தனித்திறன் போட்டிகளும் நடைபெற்றது. இதில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : தஞ்சாவூரில் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்.. பறிமுதல் செய்து நடவடிக்கை..!

சோழர்கள் பயன்படுத்திய வேட்டை நாய் :

அலங்கு என்ற பெரிய நாய் வகை 10ம் நூற்றாண்டில் சோழர்கள் தென்னிந்திய நிலப்பரப்பை ஆண்ட காலத்தில் போர்ப்படைகளில் பயன்படுத்தப்பட்டதாகும். ராஜராஜ சோழனின் போர்ப்படையில் எதிரி நாட்டு குதிரைப் படையைத் தாக்க இந்த அலங்கு இன நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான சான்றுகளை தஞ்சை பெரிய கோவிலில் பார்க்க முடியும்.

மேலும், இந்த நாய் தஞ்சாவூர், திருச்சியை பூர்வீகமாக கொண்டதாகும். தற்போது புல்லிகுட்டா நாய் இனத்தில் மூதாதையர்களாக அலங்கு இருக்கலாம் என்றும், இது பாகிஸ்தான், இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே இருப்பதாகவும் நாய் வளர்ப்போர் தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நாய்கள் கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்று நாய்களை பார்த்து ரதித்தனர்.

First published:

Tags: Local News, Thanjavur