Home /thanjavur /

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சை மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா, நல்லையன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர் ஆகிய பகுதிகளிலும், திலகர் திடல் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம் கார தெரு மின்பாதையில் மின் வினியோகம் பெறும் ரெயிலடி, சாந்த பிள்ளைகேட், மகர் நோம்பு சாவடி, வண்டிக்காரத் தெரு, வெள்ளை பிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர் ஆகிய பகுதிகளிலும், சர்க்யூட் ஹவுஸ் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜி.ஏ.கெனல் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ் ணன் நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் கீழவாசல் மார்க்கெட் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் பர்மா ஆகிய பகுதிகளிலும், வண்டிக் பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும், கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம் ஆகிய பகுதிகளிலும், வ.உ.சி.நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளிலும் 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி