Home /thanjavur /

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் என்னென்ன?

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் என்னென்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சை மாவட்டம் தஞ்சை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா மின்வாரியம் சார்பில் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நேருநகர், கன்னியம்மாள் நகர், மேலமானோஜிப்பட்டி, உப்பரிக்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    இதேபோல், ஈஸ்வரி நகர் மின்பாதையிலும், நாளை மின் தடை செய்யப்படுகிறது.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள்: தென்னக பண்பாட்டு மையம், சுந்தரம், பெயிண்ட், ரகுமான் நகர், கலைஞர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பொது மக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 9497-94987 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி