ஹோம் /தஞ்சாவூர் /

8 கி.மீ தூரத்துக்கு இருள் சூழ்ந்து குறுகிய நிலையில் சாலை- தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் அவதிப்படும் மக்கள்

8 கி.மீ தூரத்துக்கு இருள் சூழ்ந்து குறுகிய நிலையில் சாலை- தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் அவதிப்படும் மக்கள்

குறுகிய

குறுகிய சாலை

Thanjavur | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சாலை குறுகிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஆற்றோரம் இருக்கும் குறுகிய சாலையின் இருபுறமும் நாணல் செடிகள் புதர் போல் மண்டி கிடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனம் செல்வதற்கு கூட இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிகாடு கிராமத்தில் இருந்து செல்லம்பட்டி வழியாக தஞ்சை-விளார் செல்லும் இந்த சாலை அப்பகுதியிலிருந்து தஞ்சைக்கு செல்லும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையானது ஆற்றோரம் இருக்கும் குறுகிய சாலையாகும். பொதுவாக இது போன்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும்.

அதே போல் சுமார் 8.கி.மீ தூரம் அதாவது வெட்டிகாடு கிராமத்தில் இருந்து செல்லம்பட்டி வரை சாலையின் இருபுறமும் நாணல் செடிகள் புதர் போல் மண்டி கிடக்கிறது. குறுகிய சாலையாக இருப்பதால் செடிகள் சாலையை மறைத்துவிடுகின்றது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனம் செல்வதற்கு போதுமான இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஒரே நேரத்தில் ஒரு கார் மற்றும் ஒரு பைக் கூட இந்த சாலையில் செல்ல முடியவில்லை. மேலும் இரவு மின் விளக்கு வசதி இல்லாததால் செல்லும் வழி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. செடிகள் புதர் போல் மண்டி கிடப்பதால், பாம்பு பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் இவ்வழியே செல்வது சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இது குறித்து பேசிய அப்பகுதி வாகன ஓட்டிகள், ‘இது நீண்ட கால பிரச்சினை. எந்நேரமும் பரப்பரபாக இருக்கும் முக்கியமான இந்த சாலையில், இப்படி ஒரு அபாயகரமான சூழல் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒரு கார் மற்றும் பைக் கூட செல்ல முடியவில்லை. பேருந்து வரும் போது மிகவும் சிரமமாக இருக்கும்.

பேருந்து வரும் போது புதருக்குள் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது பாம்புகள் திடீரென வருகிறது. தயவு செய்து இந்த நாணல் செடிகளை முழுமையாக அகற்றி சாலையை அகலப்படுத்தி, மின் விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி என்று எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்துகிறார்கள். அதே போல் இது போன்ற கிராமங்களையும் கவனித்து எங்கள் பிரச்சினைகளையும் சரி செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur