தஞ்சாவூர் எம்.ஜி.எம். சாலை என்று அழைக்கப்படும் புதிய பஸ் நிலையம் சாலையில் விரிவாக்கம் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிக்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த நிலையில் சாலையோரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நீண்டு வளர்ந்து காட்சியளித்தது.
சாலை விரிவாக்க பணிக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை 50 ஆண்டு பழமையான இந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தியதை விட மரத்தின் மேல் பகுதி மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அடியிலிருந்து சுமார் 7 அடி உயரம் வரை உள்ள மரத்தின் பகுதியை மட்டும் பெயர்த்து எடுத்து அதனை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் கொண்டு சென்று போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.
இதையும் படிங்க : எச்சரிக்கை..! கோடை சீசனுக்கு மாம்பழங்கள் வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க..!
இந்நிலையில் வளாகத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தேவையான உரங்கள் இட்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 50 ஆண்டு பழமையான மரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து அதிகாரிகள் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur