Home /thanjavur /

தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மாற்றுத்திறளாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kumbakonam, India
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புமுகாம் நாளை நடைபெறவுள்ளது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில், கும்பகோணம், தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில், கும்பகோணம் வட்டத்தை சோ்ந்த எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரையிலான வேலைதேடும் மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்யலாம்.

    பணி வேண்டுவோா் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, இதரசான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி