முகப்பு /தஞ்சாவூர் /

+1 ரிசல்ட்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 90.09 % பேர் தேர்ச்சி.. முழு விவரம்

+1 ரிசல்ட்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 90.09 % பேர் தேர்ச்சி.. முழு விவரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Thanjavur District 11th Results 2023 | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை தெரிந்து கொள்வோம்..

  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ்நாட்டில், 10ஆம் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், 90.09 %பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 26417 பேரில் 10450 மாணவர்களும், 13348 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 85.22 %, பெண்கள் 94.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

மேலும் படிக்க... 11th Result Direct link | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in  , ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

துணைத் தேர்வு தேதிகள்

மேலும் 11ஆம் வகுப்பு துணை தேர்வு ஜுன் 27 முதல் ஜூலை 5 வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை பெற வேண்டிய தேதிகள்

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் விண்ணப்பிக்க விரும்பும் 11 ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகள் வாயிலாக வரும் 24 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய தேதி

பத்து மற்றும் பதினோராம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத வரும் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ள

First published:

Tags: 11th Exam, Exam results, Local News, Thanjavur