ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள்

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (17ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் ( புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஊரணிபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளார்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

  இதேபோல், 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்:

  பட்டுக்கோட்டை நகர்-2-ல் மகாராஜசமுத்திரம், பெருமாள் கோவில், லெட்சத்தோப்பு, பண்ணைவயல் ரோடு, வ.உ.சி. நகர், அறந்தாங்கி ரோடு மின் உள்ளிட்ட பகுதிகள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Thanjavur