Home /thanjavur /

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvaiyaru, India
    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9. மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம்,, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி