Home /thanjavur /

மனம் கவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்- சிறப்பும் வனப்பும்

மனம் கவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்- சிறப்பும் வனப்பும்

தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எந்தப்புறம் தள்ளினாலும் கீழேவிழாமல் ஆடி நிற்கும் வகையிலும், அழகாக தலையை ஆடியவாறு நின்று மனதை மயக்கும் தோற்றத்துடனும் உருவாக்கப்பட்டுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூரின் அடையாளமாக திகழ்கிறது தலையாட்டி பொம்மைகள். இந்த பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக உள்ளன. காவிரி ஆற்றின் களிமண்ணை கொண்டு செய்யப்படும் இந்த பொம்மைகள் உலகெங்கும் புகழ் பெற்றவை.

    தலையாட்டி பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும், எடைமிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும், எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்த பொம்மைகளை சாய்த்து எந்தப்புறம் தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் பழையநிலையிலேயே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

    தஞ்சை பெரிய கோவிலின் அடிப்பகுதி எப்படி அதிக எடையை கொண்டதாக இருக்கிறதோ அதேபோல, புவிஈர்ப்பு விசைக்குஏற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இந்த தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்பட்டுகின்றன. ராஜா ராணி பொம்மைகளாக முற்காலத்தில் இருந்தன. தற்போது மங்கையர்கள் நடனமாடுவது மாதிரியான பொம்மைகள், தாத்தா, பாட்டி, சிறுவர், சிறுமியர் என பொம்மைகள் பலவகை பொம்மைகள் உருவாக்கப்படு விற்பனை செய்யப்படுகின்றன.

    தலையாட்டி பொம்மைகள்


    தஞ்சாவூரில் 19ஆம் நூற்றாண்டில் இந்த பொம்மைகள் சிறப்புற்றிருந்தன. சரபோஜி மன்னர் காலத்தில் இந்த பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் போற்றப்பட்டனர். கட்டடம், சிற்பம், நாட்டியம் போன்ற பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூரில் இதுவும் தற்போது சிறப்புற்று விளங்குகிறது.

    தலையாட்டி பொம்மைகள்


    இந்த தலையாட்டி பொம்மைக்கு, முதலில் அடிப்பாகம் தயாரிக்கப்படுகிறது. வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற வடிவத்தில் சுத்தமான களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாடகள் வெயிலிலும் உலரவைக்கப்படுகின்றன.

    அதன் பின் தலையாட்டி பொம்மையின் மேல்பாகமானது அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றது. பின்னர் உப்புத்தாள்களால் நன்கு தேய்க்கப்பட்டு கண்களை கவரும் வகையில் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன. முற்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டிக், காகிதம், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றது.

    உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி வடிவமைக்கப்படுகின்றன. அதில் நிரப்பப்படும் களிமண்ணுக்கு ஏற்றாற்போல் பொம்மைகள் செங்குத்தாக நிற்கின்றன. இந்த தலையாட்டி பொம்மைகளை தஞ்சாவூர் செல்பவர்களை கட்டாயம் வாங்கத் தூண்டும் வகையில் மனதை ஈர்க்கும் தன்மை கொண்டவை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி