முகப்பு /தஞ்சாவூர் /

காடாக மாறிய பூங்கா... வீணாகும் விளையாட்டு உபகரணங்கள்.. பராமரிக்கப்படுமா மாநகராட்சிப் பூங்கா

காடாக மாறிய பூங்கா... வீணாகும் விளையாட்டு உபகரணங்கள்.. பராமரிக்கப்படுமா மாநகராட்சிப் பூங்கா

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பூங்கா

Thanjavur | தஞ்சாவூர் பரிசுத்தம்நகர் மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுவதால் விளையாட்டு உபகரணங்கள் வீணாப்போகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பரிசுத்தம்நகர் அருகே 'சாந்திநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 பூக்காக்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகளின் பொழுதுபோக்கிற்காக இந்த 2 பூங்காக்களும் கட்டப்பட்டன.

இவற்றில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மேலும் அலங்கார செடிகள் வைக்கப்பட்டு பூங்கா ஆழகாக காட்சியளித்து வந்தது. இந்த பூங்கா பயன்பாட்டில் இருந்த நேரத்தில் பலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து விளையாடி மகிழ்ந்தனர். வயதானவர்கள் வந்து இந்த பூங்காவில்  இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுத்தபடியே சிறுவர்களின் விளையாட்டுக்களை பார்த்து மகிழ்ந்தனர்.

பராமரிப்பு இல்லை:

ஆனால் தற்போது இந்த பூங்கா எந்தவித பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள செடிகள் காய்ந்து வருகின்றன. மேலும் விளையாட்டு உபகரணங்களும் துருப்பிடித்து உள்ளது. ஊஞ்சலில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த 2 பூங்காக்களும் அருகிலேயே உள்ளன.

எனவே இந்த பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது குறித்து பேசிய அப்பகுதி வாசிகள், ‘கொரோனாவிற்கு முன்பு ஒழுங்காக தான் இருந்தது. அப்போது மூடப்பட்ட பூங்கா இன்று வரை பராமரிப்பு இன்றி இருக்கிறது. இப்பகுதியை சேர்ந்த ஒருவர் தான் தினமும் 4 மணிக்கு பூங்காவை திறந்து விட்டு செல்வார். ஆனால் யாரும் உள்ளே செல்வது கிடையாது. ஒரு சிலர் இங்கு வந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விடுகின்றனர்.

மாநகராட்சியிலிருந்து வந்து பார்க்கின்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தயவு செய்து இப்பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur