ஹோம் /தஞ்சாவூர் /

நீச்சல் தெரியாத யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் - தஞ்சாவூர் ஆட்சியர் எச்சரிக்கை

நீச்சல் தெரியாத யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் - தஞ்சாவூர் ஆட்சியர் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது 6 பேர் தண்ணீரில் மூழ்கிய நிலையில், நீச்சல் தெரியாத யாரும் ஆறுகளில் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தூத்துக்குடியில் இருந்து பேருந்து ஒன்றில், 24 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் 15 குழந்தைகள் என மொத்தம் 57 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தனர். பின்னர், பூண்டி மாதா கோவிலுக்கு செல்வதற்காக பூண்டி வந்தனர் அப்போது சிலர் குளித்து விட்டு வருவதற்காக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றனர்.

இவர்களுள் 9 பேர் தனியாக சென்று ஆழமான பகுதியில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 9 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆற்றில் குதித்து தாமஸ், ஆபிரகாம், செல்வம் ஆகிய மூன்றுபேரை உயிருடன் மீட்டனர்.

மற்ற 6 பேரும் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மாயமான 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சார்லஸ் (38), பிரிதிவ்ராஜ் (36), தாவீத்(30), பிரவீன்ராஜ் (19), ஹெர்மஸ்(18) ஆகிய ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் சார்லஸ், பிரிதிவ்ராஜ், தாவீத் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன்கள் ஆவார். மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்தவர். இதுகுறித்து தகவல் அறிந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் ஆர்.டி.ஓ ரஞ்சித், பூதலூர் தாசில்தார் பெர்சியா உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தஞ்சை பகுதிகளுக்கு சுற்றுலா வருபவர்கள், நீச்சல் தெரியாத யாரும் ஆறுகளில் இறங்க வேண்டாம் என்று தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur