Home /thanjavur /

வடகிழக்கு பருவ மழை: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க தஞ்சை கலெக்டர் உத்தரவு

வடகிழக்கு பருவ மழை: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க தஞ்சை கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur Collector orders to be ready for North East Monsoon Relief Operations | வட கிழக்கு பருவ மழை துவங்குவதால், நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேலும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
வட கிழக்கு பருவ மழை துவங்குவதால், நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேலும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலை தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க  ; தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் பட்டயப் படிப்பு சேர்க்கை ஆரம்பம்

அப்போது கலெக்டர் பேசியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார் - ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைத்திட வேண்டும்.வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; தஞ்சாவூரில் பேரிடர் மீட்பு பயிற்சி நாளை துவக்கம் - தன்னார்வலர்களுக்கு அழைப்பு

மேலும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் , கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore

அடுத்த செய்தி