Home /thanjavur /

விநாயகர் சிலைகளை எங்கெங்கு கரைக்கலாம் - தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

விநாயகர் சிலைகளை எங்கெங்கு கரைக்கலாம் - தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சையில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சிலைகளை எங்கெங்கெல்லாம் கரைக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதன்படி தஞ்சை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளான வடவாறு, கல்லணை கால்வாய், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு மற்றும் கடல் ஆகிய இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இதில் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் கலவையற்றதுமான சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.‌ நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க, சிலைகள் அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயான சாயம் அல்லது எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

    சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி