ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் பீரங்கி.. 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருக்கும் இதன் தொன்மையும் சிறப்பும் தெரியுமா?

தஞ்சாவூர் பீரங்கி.. 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருக்கும் இதன் தொன்மையும் சிறப்பும் தெரியுமா?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பீரங்கி

Thanjavur Beerangi : தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி ஒரு பெரிய மேடை அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சை நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த பீரங்கி மேடு. இது தஞ்சாவூர் கொடிமரத்து மூளை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பீரங்கியானது நாயக்க மன்னர் காலத்திலே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் 1645 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த பீரங்கியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

பீரங்கி செய்யும் தொழில்நுட்பம்:

இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பு பட்டைகளால் உருவாக்கப்படும். ஆனால் இந்த பீரங்கியோ தேனிரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

தேன் இரும்பு என்பது பல்வேறு பகுதிகளை சிறிது சிறிதாக செய்து பின்பு ஒன்றோடொன்று ஒட்ட வைத்து மிக முக்கியமான இரும்பு பொருட்களை இணைக்கக்கூடிய உருக்கு உலை இணைப்பு தொழில்நுட்பம் மூலமாக செய்யப்பட்ட பீரங்கியாகும். அதனால் சுத்தமான எஃகினால் ஆன பீரங்கியாக காணப்படுகிறது.

தஞ்சாவூர் பீரங்கி

இந்த பீரங்கி எங்கு செய்யப்பட்டது? ‌

தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி ஒரு பெரிய மேடை அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் ‘இராஜகோபால பீரங்கி‘ என்று குறிப்பிடுகின்றனர். இது நாயக்கர் காலப் பீரங்கி என்பது செவி வழியாகத் தொடரும் செய்தியாகும்.

400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருக்கும் பீரங்கி:

மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கியானது வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் இருக்கும் இந்த பீரங்கியானது, 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

ராஜகோபால பீரங்கியை கணிக்கமுடியாத கான்பூர் ஐஐடியைச் சேர்ந்தவர்கள் !

2004ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடி-யை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் இந்த ராஜகோபால பீரங்கியை ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த பீரங்கியை பற்றி கணிப்பதற்கு அவர்களுக்கு சிரமம்  இருந்துள்ளது. அதற்கு முன்னதாகவே ரோஸ்லர் எனும் ஆய்வாளர் அல்ட்ராசோனிக் எனப்படும் மீயொலி அலைகளை வைத்து இந்த பீரங்கியின் வடிவமைப்பை மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பிறகு இந்த குறிப்பினை எடுத்துக் கொண்டு ஐஐடி சேர்ந்தவர்கள் இந்த பீரங்கியின் அடிப்படை அமைப்புகளை தெரிந்துள்ளார்கள்.

தஞ்சாவூர் பீரங்கி

பீரங்கியின் அளவு மற்றும் எடை:

இந்த பீரங்கி முகவாய் முதல் புட்டம் வரை 26 அடி நீளம் கொண்டது. பீரங்கியின் உருட்டுருளை குழாயின் விட்டம் 300 மி.மீ ஆகும். பீரங்கி 150 மி.மீ உட்சுவர் கனம் கொண்டது.இந்த பீரங்கி மொத்த எடையானது 27 ஆயிரம் கிலோ கிராம், அதாவது 27 டன் எடையை கொண்டது. மேலும், உலகளவில் உள்ள பீரங்கியில் முக்கியமான பீரங்கியாக கருதப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழர்களின் தொழில்நுட்பம்:

இந்த பீரங்கி உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. இன்னும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான தொழில்நுட்பங்கள் மறைக்கப்பட்டுள்ளது. நாம் அவற்றை அறியாமல் வெளிநாடுகளில் இருக்கும் தொழில்நுட்பத்தையே போற்றுகிறோம் என அப்பகுதியில் சிலர் கூறுகின்றனர்.

Thanjavur Beerangi Map
தஞ்சாவூர் பீரங்கி

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur