முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள பாலத்தின் குறுக்கு சுவர் சேதம்.. அச்சத்தில் மக்கள்! 

தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள பாலத்தின் குறுக்கு சுவர் சேதம்.. அச்சத்தில் மக்கள்! 

X
தஞ்சை

தஞ்சை பாலம் சேதம்

Thanjavur Brihadeeswara Temple | தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லனை கால்வாய் பாலத்தை பொதுமக்கள் பலரும் உபயோகித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லனை கால்வாய் கால்வாயின் குறுக்கே பாலங்கள், மதகுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாலங்கள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

பக்கவாட்டு சுவர் இடிந்தது;-

இந்த பாலம் பழுதடைந்தநிலையில் உள்ளதால் இதற்கு மாற்றாக அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. பெரியகோவில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த புதிய பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.

இந்த நிலையில் பழைய பாலத்தை ஒட்டி கட் டப்பட்டுள்ள பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனால் தடுப்புச்சுவர் இன்றி பெரிய பள்ளம் போல கல்லணைக் கால்வாய் காட்சி அளிக்கிறது.

வாகன ஓட்டிகள் அச்சம்:-

இதனால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கல்லணைக்கால்வாய்க்குள் விழுந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

மேலும், பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிடப்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இடிந்து கிடக்கும் பகுதியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Thanjavur