ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்- அம்மன் அலங்கார விவரங்கள் தெரியுமா?

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்- அம்மன் அலங்கார விவரங்கள் தெரியுமா?

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

Thanjavur big temple | உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இங்கே ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் வராகி அம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவை ஒட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

2 ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 28 ஆம் தேதி காயத்திரி அலங்காரமும், 29 ஆம் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது.

இம்மாதம் 30ஆம் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ம் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ம் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறவுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur