ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய நவராத்திரி கலை விழா- பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய நவராத்திரி கலை விழா- பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

Thanjai

Thanjai big temple Navaratri festival | தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா தொடங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் தினசரி கலந்துகொண்டுவருகின்றனர்.

Thanjai big temple Navaratri festival | தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா தொடங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் தினசரி கலந்துகொண்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

நவராத்திரி கலைவிழா:

தஞ்சை பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கலை விழாவில், முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொலு கண்காட்சி:

மேலும் வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

2-ம் நாளான நேற்று மீனாட்சி அலங்காரமும், இன்று சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur