ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | 50 ஏக்கரில் வாழை விவசாயம்: வெளிநாடுகளுக்கு தார் ஏற்றுமதி- அசத்தும் விவசாயி

Thanjavur | 50 ஏக்கரில் வாழை விவசாயம்: வெளிநாடுகளுக்கு தார் ஏற்றுமதி- அசத்தும் விவசாயி

வாழை

வாழை விவசாயி

Thanjavur | தஞ்சையைச் சேர்ந்த விவசாயி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரத்தில் வாழைப் பழத்தை விளைவித்துவருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையை சேர்ந்த விவசாயி ஒருவர் 50 ஏக்கரில் ஆர்கானிக் வாழை தோட்டம் வைத்து பொங்கல் பண்டிகைக்காக வெளிநாடுகளுக்கு வாழைத் தார்களை ஏற்றுமதி செய்ய தயாராகி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த வடுககுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மதியழகன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து திருச்சி, தஞ்சாவூர், சென்னை, கேரளா போன்ற பல ஊர்களுக்கும் வாழை தார், வாழை இலை, சாகுபடி செய்து ஏற்றுமதி செய்து வருகிறார்.

தற்போது பொங்கல் பண்டிகைக்காக சுமார் 7,000 வாழைத்தார்கள் வரை அறுவடை செய்ய உள்ளார். அதில் சுமார் 5,000 தார்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளார்.

வாழை விவசாயம் 

வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கும் இந்த வாழை தார்களை பூச்சிகள் தாக்காமல் இருக்கவும், வெடிப்புகள் இல்லாமல் இருக்கவும், பறவைகள் சேதபடுத்தாமல் இருக்கவும் தஞ்சாவூர் தோட்டக்கலையில் பாலிதீன் பையை பெற்று தார்களை சுற்றி கட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரத்திற்கு பாராமரித்து வருகிறார்.

வாழை விவசாயம்

இந்த பையை பயண்படுத்துவதன் மூலம் வெயில், பனி படாமல் இருப்பதன் மூலம் வாழைப்பழம் கெடாமல் பளப்பளப்புடன் நீண்ட நாள் இருக்கும். ஒரு தாருக்கு கூடுதலாக 70-ரூ செலவு ஆனாலும் இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது 400-க்கு விற்கும் வாழை கூடுதலாக 200ரூ-க்கு விலை போகிறது.

இதனால் இந்த முறையை பயன்படுத்தி வாழை தார்களை பராமரித்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் விவசாயி மதியழகன். வாழை பயிர்கள் சாகுபடிகாலமானது 10 மாதம் ஆகும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 1.5 லட்சம் செலவுகள் போக 1.5 லட்சம் கூடுதல் லாபம் பார்க்கிறார் இந்த விவசாயி.

இதுகுறித்து பேசிய விவசாயி மதியழகன், ‘நான் கடந்த 25 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறேன். அதில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‌‌‌‌‌வெளிநாடுகளுக்கும் வாழை ஏற்றுமதி செய்து வருகிறேன். வாழை தாரை பொருத்தவரையில் நல்ல லாபம் கிடைத்தாலும் பேரிடர் காலங்களில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்கிறது.

வாழைத் தார்களை விட வாழை இலையில் தான் எங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது. அரசு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு கரும்புகள் கொடுப்பதைபோல் வாழை பழங்களையும் கொடுக்க வேண்டும். இதனால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur