முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை காவல் தெய்வமான அய்யனார் சாமி பற்றி தெரியுமா? இத்தனை சிறப்புகளா?

தஞ்சை காவல் தெய்வமான அய்யனார் சாமி பற்றி தெரியுமா? இத்தனை சிறப்புகளா?

X
அய்யனார்

அய்யனார் கோவில் 

Thanjavur ayyanar temple | தஞ்சாவூரில் பல நூற்றாண்டுகளாக கிராம மக்களின் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார் அய்யனார்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளஆலிய வாய்க்கால் கிராமம் உள்ளது. முற்றிலும் பசுமை நிறைந்த அழகான கிராமம். இந்த கிராமத்தின் எல்லையில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ அழகிய வேம்பையனார் கோயில் உள்ளது.

அய்யனார் கிராம மக்களுக்கு குலதெய்வமாக அருள்பாலித்து வருகிறார். கோயிலை சுற்றிலும் வயல் வெளிகளும் கோயில் எதிரே அரசமரமும், தெற்கே மிகபெரிய அளவிலான குளத்துடன் இயற்கையான சூழலில் மன அமைதியை தரும் அழகான இடத்தில் அற்புதமாக அமைந்துள்ளது அய்யனார் கோவில்.

இக்கோயில் உருவாவதற்கென்ற வரலாறு ஏதும் இருக்கிறதா என்றுஇவ்வூரைச்சேர்ந்தவர்களிடம் கேட்டபோது பல நூறு ஆண்டுகள் பழமையானது ஆனால் இன்று வரை கிராம மக்களின் குலதெய்வமாக அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறார் எங்கள் அய்யனார்,எங்கஊரையும் மக்களையும் காத்து கேட்பதை நிறைவேற்றி தருகிறார் என்று கூறினார்.

தத்ரூபமான சிலைகள்:-

கோயில் நுழைவில் தெற்கிலும், வடக்கிலும்வெள்ளைகுதிரை அருகிலேயே அய்யனார்குதிரையைசங்கிலியால் பிடிப்பது போலவும் குதிரையின் காலடியில் பாம்பும், நாயும் உள்ளது போன்ற தத்ரூபமான காட்சிகளோடு சிலை அமைக்கப்பட்டது. அதே போல கோயிலை நோக்கி மேற்கு திசையில் பார்த்த படி உள்ள யானையின் அருகில் அய்யனார் வேல் வைத்திருப்பது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளோடு சிலைகள் அமைந்துள்ளது‌.

மேலும் கோயிலில் ஸ்ரீமுத்தால்ராவுத்தர், ஸ்ரீகறுப்பர், ஸ்ரீ அடைக்கல காத்தார், ஸ்ரீ சன்னாசி, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ மதுரை வீரன், ஆகிய சன்னதிகள் உள்ளது. ஸ்ரீபேச்சியம்மன்சன்னதியில் கீழே ஒருவரை மதிப்பது போன்றும் மடியில் ஒரு குழந்தையை வைத்துள்ளது போன்ற சிலைகளும் இடம்பெற்றுள்ளது.மேலும் ஸ்ரீ தூண்டில் வீரனை நாய், நரிகள் பார்ப்பது போன்ற சிலை வடிவமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று ஒவ்வொரு சிலைகளும் மிக அழகாகவும் தத்ரூபமாகவும் இக்கோயிலில் உள்ளது‌.குதிரை சிறியகோயிலாகவே இருந்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் இக்கோயில் கிராம மக்களின் நிதியோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் தெய்வம்:-

ஆடு, மாடுகாணாமல்போனால் அய்யனாரிடம் முறையிட்டால் அன்றே கிடைக்குமாம், வெளிநாடு பயணமாகட்டும், வீட்டில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் ஐயாவின் ஆசி பெற்ற பின்னரே தொடங்குவார்களாம். மேலும்திருமணதடைகளும் நீங்குமாம், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் இது காவல் தெய்வமாக இருந்து வருகிறது. முக்கியமாகப் புதுக்கோட்டை, காரைக்குடி, கொரடாச்சேரி, தேவக்கோட்டை, சென்னை மதுரை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

திருவிழா:-

வருடத்தில் ஒரு நாள் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பந்தல் காட்சி, பால்குடம் காவடி எடுத்து மிக விமரிசையாக நடைபெறும், திருவிழாவில் தமிழ்நாட்டின் பல ஊர்களில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கிவரும் பொதுமக்கள் அய்யனாரைப் பார்க்க வருவார்கள்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Temple, Thanjavur