ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் கலை தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா?

தஞ்சாவூர் கலை தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா?

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் கலை தட்டு

Thanjavur Art Plate : தஞ்சையின் பெருமை மிகு அடையாளமாக திகழ்ந்து வரும் தஞ்சாவூர் கலை தட்டு தயாரிப்பு குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கலையின் பிறப்பிடமான தஞ்சையின்‌ புகழை பறைசாற்றுவதில் தஞ்சாவூர் தட்டு அல்லது ஓவியத்தட்டு எனப்படும் கலைத்தட்டுக்கு சிறப்பிடம் உண்டு. அரசியல் மேடைகள் கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் தஞ்சாவூர் கலை தட்டுகள் நினைவு பரிசாக வழங்கப்படுவது உண்டு.

கலை தட்டுக்கள் இரண்டாம் சரபோஜி மன்னரால் ( 1777-1832) மராட்டிய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

கலை தட்டு என்பது அழகில் மெருகூட்டப்பட்ட ஒரு பித்தளை தட்டு. நடுவில், தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும் செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள்.

கலைத்தட்டுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் கலைத் தட்டுக்கு, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் லோகோவை, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. 250 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்தட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.

தஞ்சாவூர் கலைத்தட்டு

கலை தட்டு செய்யும் முறை...

மொத்தமாக அலுமினியத் தகடுகளை வாங்கி, தேவையான சைஸ்க்கு வட்டம் இழுத்து வெட்டி சமப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, டிசைனிங் ஒர்க். பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம் தான் இருக்கும். இப்போது லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என எல்லா சாமிகளையும் வைக்கிறார்கள். ஏன்? தலைவர்கள், நடிகர்கள் படங்கள் கூட வைப்பதுண்டு. எல்லாவற்றுக்கும் அச்சுகள் உண்டு.

தஞ்சாவூர் கலைத்தட்டு

600 ரூபாயில் இருந்து 22 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 50 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 2 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 100 ரூபாய் தான்

கலை தட்டு செய்யும் தொழிலாளர்கள் இது குறித்து கூறுகையில்,  “ஆர்டர்கள் அதிகம் வருகிறது.ஆனால் இது நுணுக்கமான வேலை என்பதால் இத்தொழிலை செய்ய யாரும் முன்வர மறுக்கிறார்கள். ஆட்கள் பற்றாகுறையால், வரும் ஆர்டர்களை செய்யமுடியாமல் போகிறது.

தஞ்சாவூர் கலைத்தட்டு

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை,வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் இத்தொழில் நலிந்து போக வாய்ப்புள்ளது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

200 குடும்பங்கள் இத்தொழிலை குலத் தொழிலாக செய்து வந்திருந்த நிலையில் தற்போது வேலைக்கு ஏற்ற வருமானம் இல்லாததாலும் ஆட்கள் பற்றாக்குறையாலும் பத்து குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் கலை தட்டு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்...

ஜோதி ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ்,

25, ஆனந்தா நகர்,

தஞ்சாவூர் - 613009

மொபைல் எண்: 98942 81584

Tanjavur Art Plate - Jothi Arts and Crafts
ஜோதி ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ்,

First published:

Tags: Local News, Thanjavur