Home /thanjavur /

Thanjavur | மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மறுவாழ்வு தரும் அன்பு இல்லம் 

Thanjavur | மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மறுவாழ்வு தரும் அன்பு இல்லம் 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அன்பு இல்லம்

தஞ்சாவூர்| மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு  அன்பும் ஆதரவும் கொடுத்து மறுவாழ்வை மாற்றும் அன்பு இல்லம் 

தஞ்சையில் இருக்கும் இந்த அன்பு இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய 85 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அன்பு இல்லத்தின் பொறுப்பாளராக இருக்கும் ரவிக்குமார் இந்த இல்லம் குறித்து நம்மிடம் பேசினார்.

இந்த இல்லம் குறித்து பேசிய அவர்,  ‘இந்த அன்பு இல்லம் 1974 ஆம் ஆண்டு மூன்று குழந்தைகளுடன் பாதிரியாரால் தொடங்கப்பட்டதாகும். இந்த அன்பு இல்லத்தில் ஆண், பெண் இருபாலருமாக 85 குழந்தைகள் படிக்கின்றனர். இதில் சில குழந்தைகளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களும் சில குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரும் உள்ளனர்.

வருடத்திற்கு 10 லிருந்து 12 குழந்தைகள் சேர்வதாகவும் இவர்கள் எடுக்கும் பயிற்சியை முடித்து மறுவாழ்வு பெற்று வருடத்தில் 10 லிருந்து 15 குழந்தைகள் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்று கூறினார்.

மூளை வளர்ச்சி வருவதற்கான காரணம்: மூளை வளர்ச்சி குன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இரண்டு முக்கிய காரணங்களாக சத்து பற்றாக் குறையும், காலாவதியான மருந்துகளை சாப்பிடுவதும் முக்கிய காரணமாகும். இதில் ஒரே ரத்தத்தில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுடன் திருமணம் செய்வது இது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

5 வகையான கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது:

மாணவர்களுக்கு ஐந்து வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.‌ இதில் அடிப்படைக் கல்வி, வாழ்வியல் நடைமுறைகளை அணுகுமுறை செய்யும் கல்வி, மற்றும் சிறப்பு கல்வி, தொழில் கல்வி, மற்றும் இந்த வகையான மாணவர்களுக்கு அரசு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போன்ற ஒவ்வொரு வகையாக மாணவர்கள் வகுப்பாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால் பக்கத்தில் இருக்கும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சில தனியார் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று குணப்படுத்துவதாகவும் கூறினார்.

நல்ல நிலையில் இருக்கும் மாணவர்கள்:

இங்கு படித்து பயிற்சி அளிக்கப்பட்ட பல மாணவர்கள் தற்போது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்கள். மிகவும் மோசமான நிலையில் இருந்த மாணவர்கள் கூட தற்போது குணமடைந்து வருகிறார்கள்.

ஒரு குழந்தைக்கு 900 ரூபாய்:

இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அரசு மாதம் உணவுக்காக 900 ரூபாய் கொடுக்கிறது. ஒரு குழந்தைக்கு மாதம் 2,000 ரூபாய் தேவைப்படுவதால் மீதம் இருக்கும் பணத்தேவையை நன்கொடையாளர்களிடமும் மற்றும் நிர்வாகத்திடமும் மனதுடையவர்களிடம் கிடைக்கிறது. மேலும் சில நாட்களில் ஒருவேளை இரண்டு வேளை உணவு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்‌.

குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள்:

இந்த அன்பு இல்லத்தில் 25 ஆசிரியர்கள் வேலை செய்வதாகவும் இதில் மூன்று ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் தருவதாகவும் மீதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக இருக்கிறது.

இதுவும் நன்கொடையாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் கிடைக்கும் சில உதவிகள் மூலமே கொடுக்கப்படுகிறது. பெரிய அளவில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளதால் குறைந்த அளவான ஊதியமே வழங்கப்படுகிறது. மேலும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் ஆசிரியர்களால் மட்டுமே இங்கு வேலை செய்ய முடியும் என்றும் கூறினார்.

தஞ்சாவூர் அன்பு இல்லத்துக்கு செல்லும் கூகுள் மேப்:



மேலும் மனதுடையவர்கள் நன்கொடை அளித்தால் இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவற்கு நன்மையாக இருக்கும் என்றும் கூறினார்.

அன்பு இல்லத்தை தொடர்பு கொள்ள நினைத்தால், தொலைபேசி எண் 63826 56278.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி